காலையில் வித்யாசமான உணவுகளை செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அவர்களுக்காக பீட்ரூட் இட்லி செய்து கொடுங்கள்.
தேவையானவை:
வறுத்த ரவை – 2 கப்
தயிர் – 1 கப்
பீட்ரூட் – 1
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
மாவு தயாரிக்க:
வறுத்த ரவை, தயிர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி மிருதுவான மாவு பதத்திற்கு கொண்டு வரவும். இந்த கலவையை சிறிது நேரம் ஊறவிடுங்கள்.
பீட்ரூட் துண்டுகளை ஒரு பிளெண்டரில் சேர்த்து, நன்றாக பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். செய்து வைத்துள்ள மாவில் பீட்ரூட் கலவையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
அதன் பின் இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுத்தால் சுவையான பீட்ரூட் இட்லி தயார்.