சிக்கலில் எரிவாயு விநியோகம்: எரிசக்திக்கான ஐரோப்பிய ஆணையர் எச்சரிக்கை!


ஐரோப்பிய நாடுகளில் வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு விநியோகம் மிகப்பெரிய இடையூறுகளை சந்திக்கும் என எரிசக்திக்கான ஐரோப்பிய ஆணையர் கத்ரி சிம்சன் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் போரை கண்டிக்கும் விதமாக ஐரோப்பிய மற்றும் மேற்கத்திய நாடுகள் சில ரஷ்யாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தனர், இதன் எதிரொலியாக ரஷ்யாவும் ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கிய வந்த ஏரிவாயு வழங்கலை தடுத்து நிறுத்தியது.

இந்தநிலையில், ஐரோப்பிய நாடுகளில் வரவிருக்கும் மாதங்களில் எரிவாயு வினியோகம் விநியோகம் மிகப்பெரிய இடையூறுகளை சந்திக்கும் எனவும், ரஷ்யாவின் எரிவாயு வழங்கல் நிறுத்ததை நம்மால் புறந்தள்ள முடியாது எனவும் ஐரோப்பிய ஆணையர் கத்ரி சிம்சன் (Kadri Simson) எச்சரித்துள்ளார்.

சிக்கலில் எரிவாயு விநியோகம்: எரிசக்திக்கான ஐரோப்பிய ஆணையர் எச்சரிக்கை! | Gas Supply To Face Greater Difficulties Eu Energy

ரஷ்யாவின் எரிவாயு வழங்கல் நிறுத்தத்தால் ஐரோப்பிய யூனியன் எரிவாயு சேமிப்பு 75 சதவீகிதத்திற்கும் கீழாக குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதுத் தொடர்பாக பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய ஐரோப்பிய யூனியனின்(eu) எரிசக்தி தலைவர், ஐரோப்பிய பிராந்தியத்தில் இருக்கும் நாடுகள் எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறுகளை சரிசெய்யும் தங்களது தற்கால திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் எனத் அறிவுறுத்தினார்.

மேலும் ஆற்றல் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு உறுப்பு நாடுகள் இணைந்து செயல்படுவது மிகவும் முக்கியம் என அழுத்தமாக வலியுறுத்தினார், அத்துடன் ஜுலை மாதத்தில் ஐரோப்பிய நாடுகளின் எரிவாயு தேவையை குறைப்பதற்காக எரிவாயு விநியோகத்தை பாதிக்கும் முக்கிய தொழிற்சாலைகளை ஐரோப்பிய யூனியன் அடையாளம் காணும் எனவும் தெரிவித்தார்.

சிக்கலில் எரிவாயு விநியோகம்: எரிசக்திக்கான ஐரோப்பிய ஆணையர் எச்சரிக்கை! | Gas Supply To Face Greater Difficulties Eu Energy

கூடுதல் செய்திகளுக்கு: லண்டன் சாலையில் இளம்பெண்ணிற்கு நடந்த பயங்கரம்: சோகத்தில் முடிந்த சம்பவம்!

ஐரோப்பாவின் எரிசக்தி நெருக்கடியின் மத்தியில் பொருட்களின் விலைகள் உயர்வதால், கூட்டணி நாடுகளில் ஆற்றல் துறை அமைச்சர்களுடனான இது பற்றி விவாதிக்க அவரசகால கூட்டத்தை கூட்டலாம் எனவும் கத்ரி சிம்சன் தனது கருத்தை வெளிப்படுத்தினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.