சிவசேனா MLA-க்களுக்கு ரூ.50 கோடி?-ஓபிஎஸ் பதவி காலி?-நித்தியானந்தா ஆசிரம ரெய்டு ஏன்|விகடன் ஹைலைட்ஸ்

சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் ரூ.50 கோடிக்கு விலை போனார்களா..?

ஏக்நாத் ஷிண்டே

காராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி அரசுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள், அஸ்ஸாம் மாநிலத்தில் தங்கியிருக்கின்றனர்.

இந்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே மற்றும் பிற அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை துணை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ய அளித்த நோட்டீசுக்கு ஜூலை 11ஆம் தேதிக்குள் பதில் அளித்தால் போதும் என அவகாசம் வழங்கப்பட்டிருப்பது, ஷிண்டே தரப்புக்கு தற்காலிக நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய ஷிண்டே உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்-ஏ-க்களைக் கடுமையாக சாடி சிவசேனா கட்சிப் பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், “இவர்கள் பாஜக-விடம் 50 கோடி ரூபாய்க்கு விலைபோய்விட்டனர்” எனக் கூறப்பட்டுள்ளது.

“கடைசியில் பாஜக-வின் முகமூடி கழன்றுவிட்டது. சிவசேனாவில் தற்போது நடப்பது உட்கட்சி விவகாரம் எனக் கூறி வந்தது பாஜக. ஆனால், ஏக்நாத் ஷிண்டே, பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர், குஜராத் மாநிலம் வதோதராவில் சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்துள்ளார்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான், சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்களுக்கு மத்திய அரசு உடனடியாக ஒய் பிளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. அவர்கள்தான் ஜனநாயகத்தின் பாதுகாவலர்களா அல்லது இந்த எம்.எல்.ஏ-க்கள் மும்பை திரும்பினால், மீண்டும் சிவசேனாவுக்கு வந்துவிடுவார்கள் என பாஜக பயப்படுகிறதா..?

நடந்த நாடகத்திற்கான கதை வசனத்தை எழுதியது பாஜக-வும் மத்திய அரசும்தான் என்பது தெளிவாக தெரிகிறது” என அதில் மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதனிடையே சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்க வேண்டும் என கோருகின்றனர். ஆனால், அதற்கு பாஜக இன்னும் பதில் அளிக்காத நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் திட்டம் என்ன என்பது குறித்த தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க…

ஓ.பி.எஸ் பொருளாளர் பதவியும் காலி? – அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின் பரபர நிகழ்வுகள்…

பன்னீர்செல்வம் – பழனிசாமி

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்ற நிலையில், ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திலுள்ள பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூட்டத்துக்குப் புறப்பட்டார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்க இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியானது.

ஓபிஎஸ் தேனிக்குச் சென்றிருந்த நிலையில், சென்னையில் எடப்பாடி தரப்பு இன்று அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் நடத்திய அவசரக் கூட்டத்தில் நடந்த பரபரப்பான நிகழ்வுகளை முழுமையாக தெரிந்துகொள்ள க்ளிக் செய்க…

தர்மயுத்தம் முதல் தண்ணீர் பாட்டில் வீச்சு வரை… அதிமுக-வில் பன்னீரின் வளர்ச்சியும் சறுக்கலும்!

ஜெயலலிதா சமாதியில் பன்னீர் தர்மயுத்தம்

.தி.மு.க-வில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை ஒற்றைத் தலைமை விவகாரம் கொளுந்துவிட்டு எரியும் நிலையில் நடைபெற்ற பொதுக்குழு, ஓ.பன்னீர்செல்வத்தின் வெளிநடப்பில் முடிந்தது. ஆனால், இந்த முறை பன்னீர் ரொம்பவே தளர்ந்துபோய்விட்டார்.

ஏனென்றால், பன்னீர் ஏற்கனவே தர்மயுத்தம் மூலம் எடப்பாடி தரப்பை தன்னை நோக்கிச் சமாதான கொடியை காட்டவைத்திருக்கிறார். ஆனால், இம்முறை, பன்னீர் தரப்புதான் எடப்பாடி தரப்பிடம் வெள்ளைக்கொடியைக் காட்டிவருகிறது.

இந்த நிலையில், தர்மயுத்தம் முதல் தற்போது பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதுவரை, பன்னீரின் பயணம் குறித்த விரிவான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க…

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா: எச்சரிக்கும் அமைச்சர்

கோவிட்-19 தொற்று

கொரோனா நோயின் தாக்கமும் பரவலும் குறைந்திருந்த நிலையில், தற்போது கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் சென்னையில் ஏற்படும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

சென்னையில் நேற்று மட்டும் சுமார் 497 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழு விவரங்களையும் படிக்க க்ளிக் செய்க…

யஷ்வந்த் சின்ஹா: எதிர்க்கட்சிகளின் தேர்வு சரியானதுதானா..? 

யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு

ந்தியாவின் குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களாக ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு-வும், அவரை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சிகளின் சார்பில் யஷ்வந்த் சின்ஹாவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குடியரசுத் தலைவர் வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவைத் தேர்வு செய்தது சரியானதுதானா..? ஆளும் பா.ஜ.க கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்முக்கும் சின்ஹாவுக்கும் இடையே சித்தாந்த ரீதியாக என்ன வித்தியாசம் உள்ளது என்பது உள்ளிட்ட தகவல்களை விரிவாக படிக்க க்ளிக் செய்க…

நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸ் அதிரடி சோதனை!

நித்தியானந்தா

ர்நாடக மாநிலம், பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் சாலையோரமிருக்கிறது ஆர்.ஆர்.நகர். இந்த பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொறியாளர் ஸ்ரீ நாகேஷ் என்பவர் பிரபல சாமியார் நித்தியானந்தாவின் ஆன்மிக சொற்பொழிவால் ஈர்க்கப்பட்டாராம்.

இதையடுத்து, கர்நாடக மாநிலம் பிடதி பகுதியிலிருக்கும் நித்தியானந்தா ஆசிரமத்தில் தங்கி சேவை செய்வதற்காக தன் மனைவி மாலா, மகள்கள் வைஷ்ணவி, வருதுனி ஆகியோரை 2017-ம் ஆண்டு அழைத்து சென்றிருக்கிறார்.

இந்த நிலையில், இவர் கொடுத்த புகாரின் பேரில் நித்தியானந்தா ஆசிரமத்தில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர். காரணம் என்ன..? இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க க்ளிக் செய்க…

”இளையராஜா கொடுத்து வச்சவன்..!” – கண்ணதாசன் அப்படி சொன்னது ஏன்..?

Kannadhaasan

புதுக்கோட்டையிலிருந்து ‘திருமகள்’ என்னும் ஓர் இலக்கியப் பத்திரிகை வெளிவந்துகொண்டு இருந்தது. மாதம் இருமுறை வெளிவந்த அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர், பதினேழே வயதான ஓர் இளைஞர். அவர் அந்தப் பத்திரிகைக்கு ஆசிரியரானதே ஒரு கதை. அந்தப் பத்திரிகைக்கு விளம்பரம் சேகரிக்கும் வேலையில் போய்ச் சேர்ந்தார் அவர். ஒருநாள், பத்திரிகை ஆசிரியர் லீவில் இருந்தார். முதலாளி விளம்பர அதிகாரியைக் கூப்பிட்டு, ஏதாவது எழுதுமாறு பணித்தார். எழுத்து தாகம் கொண்ட அந்த இளைஞர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, ஐ.என்.ஏ. படையைப் பற்றி அருமையான ஒரு தலையங்கம் தீட்டிவிட்டார். அது முதலாளிக்கு மிகவும் பிடித்துவிட்டது. அன்றே அவரைத் தம் பத்திரிகைக்கு ஆசிரியராக ஆக்கிவிட்டார். அந்த இளைஞரின் பெயர் முத்தையா.

இப்போது அவர் பெயர் முத்தையா அல்ல; கண்ணதாசன்.

ராமநாதபுரம் ஜில்லாவில் உள்ள சிறுகூடல் பட்டியில், தந்தைக்கு எட்டாவது பிள்ளையாகப் பிறந்த முத்தையா, எட்டாவது வரைதான் படித்தார். இவரது உடன்பிறந்தவர்கள் ஆறு சகோதரிகள், மூன்று சகோதரர்கள். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன், கண்ணதாசனின் தமையன்.

”பள்ளிக்கூடத்தை விட்டவுடன் அஜாக்ஸ் ஒர்க்ஸில் ‘டெஸ்பாட்சிங் பாயா’கப் பணியாற்றி வந்தேன். வாரம் ஐந்து ரூபாய் கூலி. என் அண்ணா, ஏ.எல்.எஸ். அங்கே பிரதம காஷியர். சின்ன வயதிலிருந்தே எனக்கு எழுத்து தாகம் உண்டு. அஜாக்ஸ் கம்பெனியிலேயே உட்கார்ந்துகொண்டு கதை எழுதுவேன். ‘கிரகலட்சுமி’ என்ற பத்திரிகையில் ‘நிலவொளியிலே’ என்ற தலைப்பில் எழுதிய கதைதான் என் முதல் கதை.

கண்ணதாசன் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை மேலும் படிக்க க்ளிக் செய்க…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.