டெல்லி: ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர்கள் முன்னிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை செயலரிடம் மனு அளித்தார். வேட்பு மனு தாக்கல் நிகழ்வில் ராகுல் காந்தி, சரத்பவார், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.