ஜப்பானில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதால், 3 மணி நேரம் மின்விளக்குகளை அணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
பல வாரங்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் மின்தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. டோக்கியோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குடியிருப்போர் குறைந்த மின்சாரத்தை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தலைநகரின் வடமேற்கு நகரமான இசெசாகியில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.