கோவை: ”ஜப்பான் ஜவுளிசந்தை மீது நாம் கவனம் செலுத்துவது ஜவுளி எற்றுமதியை அதிகரிக்கும்,” என்று மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் கூறினார்.
கோவையில் தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நடந்தது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் பங்கேற்றார்.இக்கூட்டத்தில், ‘இந்திய டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேஷன்’ கன்வீனர் பிரபு தாமோதரன் பேசியதாவது:’ஜவுளித்துறையில் செயற்கை பஞ்சு கலந்த ஆடை தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் (பி.எல்.ஐ.) அறிமுகப்படுத்தி, பல நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.அதே போல், பருத்தி சார்ந்த ஆயத்த ஆடை தயாரிப்புக்கான இரண்டாவது சிறப்பு (பி.எல்.ஐ.) திட்டத்தை அறிவிக்க வேண்டும்.நுாற்பாலைகள் அடுத்த கட்ட மதிப்புக்கூட்டிய பொருளை தயாரிக்கும் வகையில் ஊக்கமளிக்கும் சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினால், நுாற்பாலைகள் பல வண்ண துணிகளை தயாரிக்கும்.ஜப்பானில் ஜவுளி சந்தையில் நம் பங்கு இரண்டு சதவீதமே உள்ளது. ஆனால், அந்நாட்டுடன் நல்ல வர்த்தக உறவு உள்ளது. என்றார்.
ஜப்பான் சந்தை
அமைச்சர் பியூஸ்கோயல் பேசியதாவது: ஜவுளி உற்பத்திதுறை மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக்கு அனைத்து யோசனைகளையும் வரவேற்கிறேன்.நாம் ஜப்பான் சந்தையில் பெரிய அளவில் ஜவுளிப்பொருளுக்கான ஏற்றுமதி சந்தையை பிடிக்கவில்லை. அம்மாதிரியான சந்தையில் நாம் கவனம் செலுத்துவது எதிர்காலத்தில் நன்மையை ஏற்படுத்தும். இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement