குளிர்காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என ஜி7 மாநாட்டில் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார் அதிபரான ஜெலன்ஸ்கி.
அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 மாநாடு தொடங்கியது.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்பட 7 நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இதில் மிக முக்கியமாக உக்ரைன்- ரஷியா போர் குறித்த விவாதம் இடம்பிடித்தது, ஜி 7 நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்தனர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் காணொலி வாயிலாக இன்று கலந்துகொண்டு பேசுகையில், குளிர் காலத்துக்குள் போரை முடிவுக்கு கொண்டு வாருங்கள் என வேண்டுகோள் விடுத்தார்.
உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி குலேபா, ஜி-7 மாநாட்டில் ரஷியா மீது அதிகமான பொருளாதார தடைகள் விதிக்க வேண்டும்.
உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் அளிக்க வேண்டும். ரஷியாவின் ஏகாதிபத்தியம் தோற்கடிக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.