பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு, ஜூலை 1 ஆம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முர்மு ஆதரவு கோரினார்.
தொடர்ந்து திமுக தலைவர், மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உள்ளிட்டோரிடம் அவர் ஆதரவு கோர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.