டோக்கன்கள் வழங்கப்படும் நடவடிக்கைகள் ரத்து – எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு சென்ற அமைச்சர்கள்


எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதாவது எதிர்வரும் 10ஆம் திகதி வரை பொதுமக்களுக்கு எரிபொருளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இரண்டு மூன்று நாட்களுக்குள் எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டோக்கன் வழங்கப்பட்டது.
அந்த டோக்கன்களை பெற நேற்று மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இவ்வாறான நிலையில், எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டோக்கன்கள் வழங்கப்படும் நடவடிக்கைகள் ரத்து - எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு சென்ற அமைச்சர்கள் | Fuel Crisis Cancel The Process Of Issuing Tokens

வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அமைச்சர்கள்

இதேவேளை, எரிபொருள் கையிருப்பு முற்றாக குறைந்துள்ளதையடுத்து இலங்கை அமைச்சர்கள் பலர் பணம் செலுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

கட்டார் நாட்டுக்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கட்டார் சென்றுள்ளார்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் ரஷ்யாவிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார், பின்னர் பணம் செலுத்தும் அடிப்படையில் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம் என எதிர்பார்த்துள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் கடனைத் திருப்பிச் செலுத்தப் போவதில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளதால் சர்வதேச சமூகத்துடனான கடன் ஒப்பந்தங்கள் மிகவும் கடினமானதாக மாறியுள்ளது.

டோக்கன்கள் வழங்கப்படும் நடவடிக்கைகள் ரத்து - எரிபொருள் தேடி வெளிநாடுகளுக்கு சென்ற அமைச்சர்கள் | Fuel Crisis Cancel The Process Of Issuing Tokens

May you like this video




Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.