தடுமாறும் ஐடி நிறுவனங்கள்.. ஆட்டம்காட்டும் ஐடி ஊழியர்கள்.. என்ன நடக்குது..?!

கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் உலகில் உள்ள அனைத்து ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதித்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது அந்த ஊழியர்களை மீண்டும் அலுவலகத்தில் வரவழைக்க திணறி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் வீட்டிலிருந்து பணிபுரிந்த ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் வர மறுப்பதாகவும், அலுவலகத்திற்கு வர கட்டாயப்படுத்தினால் தங்கள் வேலையைக் கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்திய ஐடி நிறுவனங்களின் எதிர்காலம் எப்படியிருக்கும்.. அசென்சர் முடிவு சொல்வதென்ன?

40 ஐடி நிறுவனங்களில் ஆய்வு

40 ஐடி நிறுவனங்களில் ஆய்வு

இந்த நிலையில் 40 முன்னணி ஐடி நிறுவனங்களில் எடுத்த ஆய்வில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் மீண்டும் அலுவலகம் திரும்ப விரும்பவில்லை என்று ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

சி.ஐ.ஈ.எல்  ஆய்வு

சி.ஐ.ஈ.எல் ஆய்வு

இதுகுறித்து சி.ஐ.ஈ.எல் என்ற நிறுவனம் சமீபத்தில் கணக்கெடுப்பு நடத்தியது. 9 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்யும் 10 முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்பட மொத்தம் 40 ஐடி நிறுவனங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

வொர்க் ப்ரம் ஹோம்
 

வொர்க் ப்ரம் ஹோம்

இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 50 சதவீத ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை மீண்டும் அலுவலகத்திற்கு வரவழைத்து பணி செய்ய முயற்சி செய்தும் அதற்கு எந்த பலனும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அதனால் வேறு வழியின்றி ஐடி நிறுவனங்கள் இன்னும் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதித்து வருவதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஹைபிரிட் முறை

ஹைபிரிட் முறை

ஒரு சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலத்திற்கு வரவழைத்து விட்டன என்றும் சில நிறுவனங்கள் ஊழியர்களை அலுவலத்திற்கு வரவழைக்க திட்டமிட்டுள்ளது என்றும் இந்த ஆய்வில் இருந்து தெரிய வந்துள்ளது. மேலும் ஒரு சில நிறுவனங்கள் ஹைபிரிட் முறையில் அதாவது வாரத்தில் இரண்டு நாட்கள் அலுவலகம் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து பணி செய்யும் முறையை அமல்படுத்தி வருவதாகவும் இதற்கு கூட 25 சதவீத ஊழியர்கள் மட்டுமே ஒப்புக்கொண்டு அலுவலத்திற்கு திருப்பி உள்ளதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆய்வு முடிவு

ஆய்வு முடிவு

சிறிய நிறுவனங்களை பொருத்தவரை 30 சதவீத ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்துக்கு திரும்ப விரும்புகிறார்கள் என்றும் 70 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வதையே விரும்புகிறார்கள் என்றும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை மீண்டும் அலுவலத்திற்கு திரும்ப வரவழைப்பதில் திணறி வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முடிவு என தெரிய வருகிறது.

ராஜினாமா

ராஜினாமா

திறமையான ஐடி ஊழியர்களுக்கு எந்த ஐடி நிறுவனத்திலும் உடனடியாக வேலை கிடைக்கும் என்பதால், அலுவலகம் வர கட்டாயப்படுத்தினால் அவர்கள் வேலையை ராஜினாமா செய்ய கூட தயங்குவதில்லை என ஐடி சேவை நிறுவனத்தின் ஹெச்.ஆர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலம்

எதிர்காலம்

ஐடி நிறுவனங்கள் முழுமையாக வொர்க் ப்ரம் ஹோம் அல்லது ஹைபிரிட் முறையில்தான் பணிபுரிய வேண்டிய நிலை தான் எதிர்காலத்தில் ஏற்படும் என்றும் 100 சதவீதம் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும் ஐடி நிறுவனங்கள் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Most of the IT companies struggle to get employees back to the office!

Most of the IT companies struggle to get employees back to the office! | ஊழியர்களை அலுவலகத்திற்கு வரவழைக்க திணறும் ஐடி நிறுவனங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Story first published: Monday, June 27, 2022, 13:16 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.