இலங்கையிலிருந்து படகு மூலம் தனுஷ்கோடி வந்த வயதான தம்பதி, கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இதனால் அந்நாட்டை விட்டு மக்கள் அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக தமிழர்கள் பலர் இந்தியாவுக்கு கப்பல், படகு மூலம் பயணம் செய்து வருகின்றனர். இதுவரை நெருக்கடியை சமாளிக்க முடியாமல் 85க்கும் அதிகமானோர் தமிழகத்திற்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வயதான தம்பதியர் இரண்டு பேர் இன்று அதிகாலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கியுள்ளனர்.
அவர்கள் இலங்கை திருகோணமலை பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலம் வந்ததாக தெரிய வந்தது.
ஆனால் அவர்கள் இருவரும் மயக்க நிலையில் கடற்கரையில் விழுந்து கிடந்துள்ளனர். இதனை கவனித்த சிலர், உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கடற்கரை பகுதிக்கு விரைந்த பொலிசார் மயக்க நிலையில் இருந்த தம்பதியரை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.