திருச்சி கிழக்கு கோட்டம் துவாக்குடி உப கோட்டம் துவாக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் நாளை (28.06.2022) காலை 09.45 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் உள்ளது.
துவாக்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெரும் பகுதிகள் நேரு நகர் அண்ணா வளைவு, ஏ.ஓ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், M.D.சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஷிப்பில் C- செக்டார் மற்றும் A, E, R & PH செக்டார், தேசிய தொழில்நுட்பக் கழகம் (NIT), துவாக்குடி மற்றும்
துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயனேரி, பொய்கைகுடி ஆகிய பகுதிகளுக்கு மின் வினியோகம் இருக்காது என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.
செய்தி: க. சண்முகவடிவேல்