"திரைத்துறையில் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கின்றன; பாக்ஸ் ஆபீஸ் பற்றி யோசிப்பதில்லை" – பூஜா ஹெக்டே

சினிமா உலகின் ஒவ்வொரு சீசனிலும் ஒரு நடிகை டிரெண்டிங்காக இருப்பது வழக்கம். அந்த வகையில் தற்போது டிரெண்டிங்காக இருப்பவர் பூஜா ஹெக்டே. தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். குறிப்பாக தெலுங்கில் அவர் நடித்த ‘oka laila kosam’, ‘maharshi’, ‘most eligible bachelor’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதே சமயம் அவர் நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. இப்படி தனது சினிமா வாழ்வில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர் பூஜா ஹெக்டே.

இதுகுறித்துப் பேசிய அவர் இவ்வாறு கூறினார். “எனது ஆறு படங்கள் வெற்றி பெற்றிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனது சினிமா வாழ்வின் சிறந்த காலக்கட்டமாக இது கருதப்படலாம். ஆனால், என் ஆரம்பகால சினிமா வாழ்வு தோல்வியிலிருந்துதான் தொடங்கியது. என் ஆரம்பகால படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால் எனக்கு வேறு படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நான் எதிர்பார்த்த கதாபாத்திரங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. பின்னர் தெலுங்கில் நான் நடித்த படம் ஒன்று நன்றாக ஓடியபோதுதான் மகிழ்ச்சியாக இருந்தது.

பூஜா ஹெக்டே

அதேசமயம் திரைத்துறையில் வெற்றி தோல்வி இரண்டுமே இருக்கின்றன. சில படஙங்கள் வெற்றி பெறலாம். சில தோல்வியடைலாம். இதை உணர்ந்துதான், நான் பாக்ஸ் ஆபீஸ் பற்றி யோசிப்பதேயில்லை. அப்படி யோசித்தால் அது என்னை பாதித்துவிடும். எனவே வெற்றி தோல்வி இரண்டையுமே சமமாக எடுத்துக்கொள்வது அவசியம். சினிமாவில் நான் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும். நிறைய வித்தியாசமான படங்களில், நான் விருப்பும் பல இயக்குநர்களுடன் பணிபுரிய விரும்புகிறேன். என்னுடைய சினிமா வாழ்வின் சிறந்த காலக்கட்டத்தை அடைய நான் இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய நடிகராகத்தான் நான் என்னை உணர்கிறேன். அப்போதுதான் சிறப்பாக பணியாற்ற முடியும். ” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.