உக்ரைனின் மையப் பகுதி நகரான கிரெமென்சுக்-கில் உள்ள வணிக வளாகத்தின் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் குறைந்தபட்சம் 2 பேர் உயிரிழந்து இருப்பதாகவும், 20 பேர் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் உக்ரைனின் மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மத்திய உக்ரைனின் முக்கிய தொழிற் நகரமான கிரெமென்சுக்-கில்(Kremenchuk) திங்கள்கிழமை ரஷ்ய ராணுவத்தினர் திடீரென ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.
இந்த ஏவுகணை தாக்குதலில் அங்குள்ள வணிக வளாகம் ஒன்று முற்றிலுமாக தகர்க்கப்பட்ட நிலையில், வணிக வளாகம் முழுவதும் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது, இதில் 2 பேர் வரை உயிரிழந்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து இருப்பதாக மூத்த உக்ரைனிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
⚡️ Volodymyr Zelenskyy published a video of a fire in a shopping center in Kremenchug
“The occupiers launched a missile strike at shopping center. There were more than a thousand civilians. The mall is on fire, rescuers are extinguishing fire, number of victims is unimaginable.” pic.twitter.com/Src2qh3Tdf
— NEXTA (@nexta_tv) June 27, 2022
இதுத் தொடர்பாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (zelenskiy) பகிர்ந்துள்ள வீடியோவில், வணிக வளாகமும் முழுவதும் தீப்பற்றி எரிவதுடன் வணிக வளாகத்தை சுற்றி கரும்புகை மூட்டமாக இருப்பது காட்டப்பட்டுள்ளது.
மேலும் இந்த தாக்குதலில் உயிரிழப்பு குறித்து எத்தகைய குறிப்பிட்ட தகவலையும் தெரிவிக்காத ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, வணிக வளாகத்தில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரை இருந்தாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
REUTERS
அத்துடன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அவரது டெலிகிராம் பக்கத்தில் கருத்தில், ரஷ்யர்களிடன் இருந்து கண்ணியம் மற்றும் மனிதாபிமானம் ஆகியவை தொடர்பாக நம்பிக்கை வைப்பது பயனற்றது என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், படுகாயம் அடைந்தவர்களில் 9 பேர் மிகவும் மோசமான உடல் நிலையில் இருப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் துணைத் தலைவர் கைரிலோ திமோஷென்கோ தெரிவித்துள்ளார்.
REUTERS