அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியை வழிநடத்தும்படி எடப்பாடி பழனிசாமியைப் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் பேட்டியளித்த ஜெயக்குமார், துரோகத்தின் ஒட்டுமொத்த அடையாளம் ஓ.பன்னீர்செல்வம் என்றும் அவர் பொருளாளராக நீடிப்பாரா? என்பது பற்றி பொதுக்குழுக் கூட்டத்தில் தெரியும் என்றும் கூறினார்.