தென் ஆப்பிரிக்காவில் இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் உட்பட சுமார் 21 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் இருந்து சுமார் 1,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகரம் தெற்கு லண்டன். இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் சிறுவர்கள் பார்ட்டிக்கு வந்துள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை இந்த இரவு விடுதியில் பலர் மர்மான முறையில் உயிரிழந்து கிடந்தது தெரிய வந்துள்ளது.
இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் இரவு விடுதிக்கு சீல் வைத்து உடல்களை கைப்பற்றினர். சிலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பள்ளி சிறுவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களுக்கு வயது 13 முதல் 14 வரை இருக்கும் எனத் தெரிகிறது. இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.
மீண்டும் பரவும் கொரோனா…. குடியிருப்பு பகுதிகளுக்கு சீல்!
உயிரிழந்த சிறுவர்களின் உடல்களில் எந்த காயங்களும் இல்லை என்றும் கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக காவல் துறை தெரிவித்து உள்ளது. மேலும் பிரேத பரிசோதனை முடிவில் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த மாகாணத்தின் தலைவர் ஆஸ்கர் மபுயானே கூறுகையில், ‘இதை நம்பவே முடியவில்லை. இந்த இளைஞர்கள் யாரும் நோய்வாய்பட்டவர்கள் இல்லை. இவர்கள் விடுமுறையை குடும்பத்துடன் ஆனந்தமாக கழிக்க வேண்டியவர்களே. இதுபோன்று உயிரை விட்டுள்ளது பெரும் கவலையை தருகிறது’ என்றார்.