நூறாண்டு காலத்தில் முதன்முறையாக ரஷ்யா தனது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வட்டிதொகை செலுத்துவதில் இருந்து தவறியுள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால், ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இந்த நெருக்கடியால் 100 மில்லியன் டாலர் வட்டிக்தொகையை, கடைசி நாளான இன்று ரஷ்யாவால் செலுத்த முடியாமல் போனது.
ஆனால், இதனை கௌரவ பிரச்சனையாக கருதும் ரஷ்யா, பணம் வங்கியில் செலுத்தப்பட்டு விட்டதாகவும், ஆனால் இன்னும் முதலீட்டாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.