நெல்லை : ஆட்டோ கவிழ்ந்து விபத்து.. 5 வயது எல்கேஜி சிறுவன் உயிரிழப்பு.!

ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயதுடைய எல்கேஜி மாணவன் பலியையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வசவப்புரம்-செய்துங்க நல்லூர் சாலையில், பள்ளிக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஆட்டோ ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படும் நிலையில், ஆட்டோவுக்கு அடியில் சிக்கிய நவீன் என்ற 5 வயது எல்கேஜி சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், ஆட்டோவில் பயணித்த மற்ற 5 மாணவர்களும் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த மாணவர்களுக்கு தனியார் மருத்துமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.