மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) புதிய தலைவராக இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியான நிதின் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
வருமான வரி (ஐ-டி) கேடரின் 1986 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான நிதின் குப்தா, இவ்வாரியத்தில் உறுப்பினராக (விசாரணை) பணியாற்றி வருகிறார். அடுத்த ஆண்டுச் செப்டம்பரில் ஓய்வு பெற உள்ள நிலையில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) புதிய தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
கஞ்சா கோழி.. தாய்லாந்தில் இப்போ இதுதான் டிரெண்ட்..!
நியமனக் குழு
ஜூன் 25 அன்று வெளியிடப்பட்ட உத்தரவில், “அமைச்சரவை நியமனக் குழு, சிபிடிடி அமைப்பின் உறுப்பினரான ஸ்ரீ நிதின் குப்தா, ஐஆர்எஸ் (ஐடி: 86) மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவராக நியமனம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.
கூடுதல் பொறுப்பு
ஏப்ரல் 30 அன்று ஜே பி மொஹபத்ரா ஓய்வு பெற்ற பிறகு, CBDT தலைவர் பதவியை இவ்வாரிய உறுப்பினரும் 1986-பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியுமான சங்கீதா சிங் கூடுதல் பொறுப்பில் வகித்து வந்தார்.
CBDT அமைப்பு
CBDT அமைப்பு ஒரு தலைவர் வழிகாட்டுதலின் படி 6 சிறப்புச் செயலர் உறுப்பினர்களைக் கொண்டு நிர்வாகம் செய்யும் கட்டமைப்பைக் கொண்டு உள்ளது. இது வருமான வரித்துறையின் நிர்வாக அமைப்பாகும்.
ஐந்து உறுப்பினர்கள்
தற்போது வாரியத்தில் ஐந்து உறுப்பினர்கள் உள்ளனர், 1985-பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரி அனுஜா சாரங்கி மூத்தவர். மற்ற உறுப்பினர்கள் பிரக்யா சஹய் சக்சேனா மற்றும் சுபஸ்ரீ அனந்த்கிருஷ்ணன், இருவரும் IRS இன் 1987 தொகுதியைச் சேர்ந்தவர்கள்.
நித்தி அயோக்
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், வெளியேற உள்ள நிலையில் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் முன்னாள் செயலாளரும், ஸ்வச் பாரத் இயக்கத்தின் பின்னால் இருந்து இயக்கும் முக்கிய அதிகாரியுமான பரமேஸ்வரன் நிதி ஆயோக் அமைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ITR தாக்கல்
நடப்பு கணக்கீடு ஆண்டு (AY) 2022-23 க்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான சேவைகளை வருமான வரித் தளத்தில் துவங்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது.
ITR கடைசி நாள்
இதன் மூலம் ஐடிஆர் தாக்கல் செய்யப் போதுமான ஆவணங்களைத் தயார் செய்துள்ள அனைவருக்கும் இப்போதே தாக்கல் செய்ய முடியும். அதேபோல் ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதி ஜூலை 31 ஆகும்.
டன் கணக்கில் மாட்டு சாணம் ஏற்றுமதி.. வாங்குவது யார் தெரியுமா..?
Nitin Gupta, Appointed as New Chairman Of CBDT by Appointments Committee of the Cabinet
Nitin Gupta, Appointed as New Chairman Of CBDT by Appointments Committee of the Cabinet நேரடி வரிகள் வாரியத்தின் புதிய தலைவராக நிதின் குப்தா நியமனம்..!