ராஜஸ்தான் மாநிலத்தில் பறவைகள் வாழ்வதற்காகவே ஆறு அடுக்கு கொண்ட ஒரு சிறிய கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது நகரமயமாதல் காரணமாக பறவைகள் கூடு அமைத்து தங்குவதற்கான இடம் இல்லாததால், ஏராளமான பறவைகள் அழியும் நிலையில் உள்ளன.
சுற்றுச்சூழலை காக்கும் பறவைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற முனைப்புடன் ஜெய்ப்பூரை சேர்ந்த கோசாலையில், பறவைகள் தங்குவதற்காகவே பிரத்யேக கட்டடத்தை உருவாக்கியுள்ளனர். இதில் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பறவைகள் வரை தங்கலாம் எனத் தெரிவிக்கின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM