பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு பைகளில் திணித்து கொடுக்கப்பட்ட பணம்… உருவாகியுள்ள சர்ச்சை


பல சர்ச்சைகளில் சிக்கிய ஒரு நபரிடமிருந்து பிரித்தானிய இளவரசர் சார்லஸ் தனது தொண்டு நிறுவனத்துக்காக பெற்ற நன்கொடைகளால் சிக்கல் உருவாக்கியுள்ளது.

கத்தார் நாட்டவரான Hamad bin Jassim bin Jaber Al Thani என்பவர், 2011க்கும் 2015க்கும் இடையில் இளவரசர் சார்லசுக்கு இரண்டு பைகள் மற்றும் ஒரு சூட்கேசில் அடைத்து, 2.5 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக கொடுத்துள்ளார்.

பிரச்சினை என்னவென்றால், அந்த பணம் இளவரசர் சார்லஸ் அரசு முறைப் பயணமாக கத்தாருக்குச் சென்றபோது கொடுக்கப்பட்டதல்ல. அதாவது, ராஜ குடும்பத்தினர் அரசு முறைப்பயணமாக செல்வது தொடர்பான பட்டியலில் இளவரசர் சார்லஸ் கத்தார் சென்றது குறித்த தகவல்கள் இல்லை, ஆனால், அவர் கத்தார் ஷேக்கிடம் பணம் பெற்றுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு பைகளில் திணித்து கொடுக்கப்பட்ட பணம்... உருவாகியுள்ள சர்ச்சை

ஆகவே, அது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட உள்ளது.

ஏற்கனவே, சார்லசுடைய மற்றொரு தொண்டு நிறுவனம், சவுதி பிசினஸ்மேன் ஒருவரிடமிருந்து நன்கொடை பெற்றுக்கொண்டு, பதிலுக்கு அவருக்கு பிரித்தானிய குடியுரிமை வழங்கியதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு பைகளில் திணித்து கொடுக்கப்பட்ட பணம்... உருவாகியுள்ள சர்ச்சை

பிரித்தானிய இளவரசர் சார்லசுக்கு பைகளில் திணித்து கொடுக்கப்பட்ட பணம்... உருவாகியுள்ள சர்ச்சை



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.