இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி இந்திய அரசு பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை, ஒன்றிய அரசு சமீபத்தில் மாநிலங்களின் நிலையையும், கடன் அளவையும் ஆய்வு செய்து எந்த மாநிலம் அதிகப்படியான கடனிலும் ஆபத்தான கட்டத்திலும் இருக்கிறது என்பதைப் பட்டியலிட்டு உரிய நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் இலங்கையில் பொருளாதாரம், வர்த்தக நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவது மட்டும் அல்லாமல் கொரோனா இல்லாமலே வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய நிலை உருவாகுமா என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
இந்த நிலையில் இலங்கையின் மின்சாரம் மற்றும் எனர்ஜி துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை பொருளாதாரம் சீர்குலைந்து போச்சு.. ரணில் விக்கிரமசிங்க வேதனை
இலங்கை
இலங்கையின் நிதி நிலை மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் எஞ்சியிருக்கும் அன்னிய செலாவணி இருப்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதற்காகக் குறைந்த அளவிலான எரிபொருளை மட்டுமே வாங்கக் கூடிய நிலையில் உள்ளது.
டோக்கன்
இந்த மந்தமான இருப்பு மற்றும் விநியோகம் இருக்கும் காரணத்தால் இலங்கை முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்கள் வாடிக்கையாளர்களுக்குத் திங்கட்கிழமை முதல் டோக்கன் வழங்கும் முறை தொடங்கும் என்று இலங்கையின் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 26) அறிவித்தார்.
ராணுவம்
விஜேசேகரக் கொழும்பு நகரில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இலங்கை ராணுவம் மற்றும் போலீஸார் வரவழைக்கப்பட்டு உரியப் பாதுகாப்பு உடன், பெட்ரோல் மற்றும் டீசல் வாங்க மக்களுக்கு டோக்கன் எண்கள் வழங்கப்படும். இதன் அடிப்படையில் தான் எரிபொருள் பெட்ரோல் பங்க்-களில் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மொபைல் எண்
மேலும் பொதுமக்கள் தங்களின் மொபைல் எண்களை அருகில் உள்ள பெட்ரோல் பங்க்-களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர், மேலும் அவர்களின் மொபைல் எண்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டவுடன் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார் காஞ்சன விஜேசேகர.
அடுத்த எரிபொருள் ஏர்றுமதி
விஜேசேகர நாட்டிற்கு அடுத்த எரிபொருள் ஏற்றுமதி எப்போது வரும் என்ற தேதி உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் இரண்டு அமைச்சர்கள் திங்கட்கிழமை ரஷ்யாவிற்குச் சென்று எரிபொருள் இறக்குமதி குறித்து நேரடியாக விவாதிக்க உள்ளனர்.
விலை உயர்வு
இதேவேளையில் இலங்கையில் முன்னணி எரிபொருள் விநியோ நிறுவனங்களான சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன் மற்றும் லங்கா IOC ஆகியவை ஞாயிற்றுக்கிழமை 4வது முறையாக எரிபொருள் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
Sri Lanka Fuel Crisis: Token system for rationing fuel to people amid limited supply
Sri Lanka Fuel Crisis: Token system for rationing fuel to people amid limited supply பெட்ரோல் வேணுமா, டோக்கன் வாங்குங்க முதல்ல.. அளந்து அளந்து ஊற்றும் நிலை..!