மதுரையில் களைகட்டியது இளையராஜா இசை நிகழ்ச்சி

மதுரை : மதுரையில் 'ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ'… என்ற ஆன்மிக பாடலுடன் துவங்கிய 'இசையென்றால் இளையராஜா' இன்னிசை நிகழ்ச்சி மக்கள் வெள்ளத்தில் களைகட்டியது. நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ், சத்யா நிறுவனம் சார்பில் மதுரை ஒத்தக்கடை வேலம்மாள் குளோபல் கேம்பஸ் மைதானத்தில் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.

முதலில் 'ஜனனி, ஜனனி' பாடலை பாடி ரசிகர்களின் ஆரவார மழையில் நனைந்தார் இளையராஜா. அவரை தொடர்ந்து இளம், மூத்த பின்னணி பாடகர்கள் பலர் இளையராஜாவின் ஹிட் பாடல்களை பாடி அசத்தினர். இசைக்கு ஏற்ப ரசிகர்களுடன் மேடையில் இருந்த வண்ண விளக்குகளும் தாளம் போட்டு ரசித்து மின்னியது.நடிகர் வடிவேலுவும் பாட்டு பாடி அசத்தினார். யானைமலை அடிவாரத்தில் பொன்மாலை பொழுதில் மனதை மென்மையாக்கிய சந்தோஷத்தில் இசை ரசிகர்கள் ராஜாவின் பாடல்களை முணுமுணுத்தபடி வீடு சென்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.