கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் 300க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
60,65,70,75,80 ஆகிய எடை கொண்டவர்களுக்கு தனித்தனியாக நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தை கன்னியாகுமரியை சேர்ந்த அணிஷ் பிரசாந்த் என்பவர் கைப்பற்றினார். பெருமுடா பிரிவில் சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் வெற்றி பெற்றார்.