அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்கு எதிர்வினையாற்றுபவர்கள் நம்முடைய மீம்ஸ் கிரியேட்டர்கள். நாகரிகமான மொழியில் நகைச்சுவையாக உருவாக்கப்படும் அரசியல் மீம்ஸ்கள்தான் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும்.
இன்றும் அதிமுகவில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே நடந்துவரும் மோதல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு செம தீனியாகி இருக்கிறது. சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
“பொதுக்குழுவில் ‘விடை’ கிடைக்கும்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஜீயை பொதுக்குழுவுக்கு கூப்பிடுங்க… ‘வடை’ கிடைக்கும்..!” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி “தன்னை இரண்டாம் கலைஞர், இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம். சின்னவர் என்று அழைக்கலாம்.” என்று கூறியதற்கு நெல்லை அண்ணாச்சி என்ற ட்விட்டர் பயனர், “OK… செல்லம்” என்று மீம்ஸ் போட்டுள்ளார்.
“ஒற்றை தலைமைக்கு OPS உடன்பட வேண்டும்..” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கூறியதற்கு, ஓ.பி.எஸ்-சின் மைண்ட் வாய்சாக, “# Ready…but நான்தான்.. தலைவர்…!!!” என்று மீம்ஸ் முலம் நெல்லை அண்ணாச்சி கிண்டல் செய்துள்ளார்.
“துரோகத்தின் அடையாளம் ஓபிஎஸ்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியது குறித்து, வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “மாமா இத இவரு மெயின் ரோட்ல நின்னுட்டு சொல்றாரு மாமா” என்று மீம்ஸ் மூலம் கலாய்த்துள்ளார்.
இதயவன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் நினைக்கிறார்கள்” என்று சசிகலா கூறியதற்கு, “எந்த கட்சி தொண்டர்கள்?!!” என்று வடிவேலு குரலில் கேட்டு மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
“அதிமுகவினரை ஒருங்கிணைக்கும் தகுதி இல்லாதவர் ஓபிஎஸ்” என்று ராஜன் செல்லப்பா கூறியதற்கு, “அதெல்லாம் நீங்க எல்லாம் பேச ஆரம்பிச்சவே தெரியும்..!” என்று சரவணன். M என்ற ட்விட்டர் பயனர் மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
“அரசு கட்டிடத்தை கையாலேயே இடித்து தரம் குறித்து புகார் கூறிய எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு” என்ற செய்தி குறித்து, “இப்படி கையாலே இடிச்சு உடைத்தால் புல்டோசர் வாங்கினதை அதெல்லாம் என்ன செய்றது…” என்று சசிகுமார் ஜே என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
“சாதி, மதம் பார்க்காமல் மக்களுக்காக பாடுபடும் ஒரே கட்சி பாமக தான்” என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாக வெளியான செய்தி குறித்து, கருப்பு மன்னன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “சாதி பார்க்க மாட்டேன்ன்னு சொன்னாங்களா உன் கிட்ட..” என்று பீஸ்ட் பட செல்வராகவன் மீம்ஸ் போட்டு கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “ஜனநாயக வரலாற்றில் அவசர நிலை ஒரு கரும்புள்ளி” என்று பிரதமர் மோடி கூறியதற்கு, “# நேரு be like: அப்பாடா.. ஒரு வழியா என்னை விட்டுட்டு இந்திரா காந்தி காலத்துக்கு போயிட்டான்..” என்று பிரதமர் மோடி எப்போதும் நேருவை விமர்சித்து வந்த நிலையில், இப்போது இந்திரா காந்தியை விமர்சித்திருப்பது குறித்து மீம்ஸ் மூலம் கிண்டல் செதுள்ளார்.
ஓ.எஸ்.ஆர், குடியரத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் அரசியல் அனுபவங்களைக் குறிப்பிட்டு, அவருடைய கிராமத்தில் அவருக்கு அதிகாரம் இல்லை. இப்போது பழங்குடியினருக்காக அவர் என்ன செய்வார் என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார். இதை ஆமோதிக்கும் விதமாக கிரீஸ் டப்பாவை எப்படி உதைச்ச..? என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “அதனால தான் குடியரசு தலைவராவே நிக்க வைக்கறாங்க, பேசாம போவியா..” என்று கலாய்த்துள்ளார்.
ஜோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “என்ன பண்ணிட்டு இருக்கே தம்பி?
தம்பி ~ கட்சிக்காக கேன்ல நிதி வசூல் பண்ணிட்டு இருக்கேன்.
~ நீ இங்க குலுக்கிட்டு இரு, அங்க உன் அதிபரு அடுத்த கட்சிக்கு புரோக்கர் வேலை பாத்திட்டு இருக்காரு, அதை கவனி முதல்ல..” நாம் தமிழர் கட்சியினரை மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“