நாம அன்றாடம் பயன்படுத்தும், சாப்பிடுகிற பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் அதற்கான வரிகளில் இருந்து விலக்கு பெறுவதற்காக எப்படியெல்லாம் தங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள், இதனால் எவ்வளவு வரி விலக்கு அந்த நிறுவனங்களுக்கு கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
Cameras:
சினிமாக்கள் மற்றும் மிக நீண்ட நேரத்துக்கு ஒளிப்பதிவு செய்யும் கேமிராக்களை தவிர DSLR உட்பட எல்லா வகையான handi கேமிராக்களிலுமே 29 நிமிடம், 59 நொடிகளுக்கு மட்டுமே வீடியோவாக பதிவு செய்ய முடியும். இது எதோ தொழில்நுட்ப காரணத்துக்காகத்தான் இருக்கும் என நினைக்கிறீர்களா?
அதுதான் இல்லை. 30 நிமிடங்களை கடந்து வீடியோ பதிவு செய்யும் வகையிலான கேமிராக்களாக இருந்தால் அதற்கு கூடுதலாக கலால் மற்றும் பிற வரிகளை கட்ட நேரிடும். அதனை தவிர்க்கவே 29.59 என்ற கணக்கில் நிறுவனங்கள் கேமிராக்களை தயாரிக்கின்றன.
Kitkat:
கிட்காட்னாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தமான ஒரு சாக்லேட்தான். ஆனால் கிட்காட் சாக்லேட்டே இல்லை Wafer-ன்னுதான் அதன் நெஸ்ட்லே நிறுவனம் கூறியிருக்கிறது. ஏன் தெரியுமா?
ஏனெனில், Wafer விட சாக்லேட்டுக்கு இந்தியாவில் கூடுதலாக வரி வசூலிக்கப்படுவதால் கிட்காட்டை Wafer-ன்னுதான் அதோடு நிறுவனம் கூறியிருக்கிறது. இதன் மூலம் 10 சதவிகித குறைத்துதான் கிட்காட்டுக்கு வரி செலுத்தப்பட்டு வந்திருக்கு. இதற்காக நெஸ்ட்லே-க்கு 24 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கு.
Parachute Oil:
இந்தியாவில் மிகவும் பிரபலமான தேங்காய் எண்ணெய் பாராசூட் ஆயில். நீல கலரில் இருக்கும் இந்த ஆயிலின் பாட்டிலில் எங்குமே தலைக்கு தேய்க்கக் கூடிய தேங்காய் எண்ணெய் என்று குறிப்பிடப்பட்டிருக்காது.
சமையலுக்கும் பயன்படுத்துவதோடு பெரும்பாலும் பாராசூட் எண்ணைய்யை தலைக்கு தேய்ப்பதற்காகவே பயன்படுத்துவார்கள். ஆனால் பாராசூட் ஆயிலை edible oil என்றே அதன் marico நிறுவனம் குறிப்பிடுவது வழக்கம். ஏனெனில், வரியை குறைத்து கட்டுவதற்காகவே சமையலுக்கான ஆயில் என குறிப்பிடுகிறார்கள். இதன் மூலம் கிட்டத்தட்ட 13 சதவித வரியை மரிக்கோ நிறுவனம் குறைத்து கட்டுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM