வாகன இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக இன்று முதல் வாகன உரிமையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இருப்பினும் , எரிபொருளை கொண்டுவருவதில் ஏற்பட்ட தாமதத்தினால் இந்நடவடிக்கை உரிய தினத்தில் மேற்கொள்ள முடியாமற்போனதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதுதொடர்பாக 25 மாவட்டங்களின் செயலாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமையன்று கலந்துரையாடப்பட்டது. இதன் போது ஒவ்வொரு வாகன உரிமையாளரும் ,அத்தியாவசிய தேவைக்காக எரிபொருள் தேவை உள்ளவர்கள், தமது பிரதேசத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்கள் ,விவசாய உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலம் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
எரிபொருள் தேவைப்படும் தொழிற்சாலைகள் பேக்கறி உரிமையாளர்கள் மண்டப உரிமையாளர்கள் உள்ளிட்டேரர் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் .QR குறியீடுகளின் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும். என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் கிடைத்தவுடன் இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்று தெரிவித் அமைச்சர், முன்வைக்கப்படும் எரிபொருள் தேவையில் 100 % தேவையை எம்மால் பூர்த்தி செய்ய முடியாது. 40% மளவிலான தேவையையே எம்மால் பூர்த்தி செய்ய முடியும்.வாகனங்கள் அல்லது தொழிற்சாலைகளாக இருந்தாலும் இந்த நடைமுறையையே தற்போது எம்மால் மேற்கொள்ள முடியும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்தார்.