சென்னை: மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று (27-ம் தேதி) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும். 28 முதல் 30-ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் சேலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வரும் 28-ம் தேதி வரை குமரி கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், கர்நாடக பகுதிகள் மற்றும் அதை ஒட்டியுள்ள கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரையிலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். அதனால், மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.