ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மனைவி மீது தாக்குதல் நடத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்
வேலூர் மாவட்டம், சின்னப்பாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு திருமணமாகி சுபாஷினி என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது, மது அருந்திவிட்டு வீட்டில் உள்ளவர்களை தொல்லை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால், கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க சென்றுள்ளார். இதனை கண்ட வேல்முருகன் ஆத்திரத்தில் அவரை அழைத்து செல்ல முயன்றார். இதில், அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்த முயன்றனர். அதற்கு அவர் காவல்ர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். தொடர்ந்து மனைவியை தாக்கியதால் வேல்முருகனை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.