104 வருடங்களுக்கு பிறகு மோசமான நிலை.. இடியாப்ப சிக்கலில் ரஷ்யா..எப்படி?

ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் ரஷ்யா மீது பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதற்கு எதற்கும் பிடி கொடுக்காமல், தொடர்ந்து போர் புரிந்து வருகிறது. இதனால் உக்ரைனில் லட்சக்கணக்கானோர் இறந்திருக்கலாமோ என்ற அச்சமும் நிலவி வருகின்றது.

இதற்கிடையில் ரஷ்யா மீது மறைமுகமாக நிதி ரீதியாக போர் புரிந்து வரும் அண்டை நாடுகள், ரஷ்யாவினை எந்த வழியில் எல்லாம் முடக்க முடியுமோ? அந்த வழிகளில் எல்லாம் முடக்கி வருகின்றன.

இதற்கெல்லாம் தளராது ரஷ்யா தொடர்ந்து, வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது.

ரஷ்யா வேண்டாம்.. வெளியேறும் அமெரிக்க காலணி நிறுவனம்.. என்ன காரணம்?

104 வருடங்களில் இல்லாத பிரச்சனை

104 வருடங்களில் இல்லாத பிரச்சனை

எனினும் இதன் தாக்கம் நிச்சயம் ரஷ்யாவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம். 1918-க்கு பிறகு அல்லது 104 வருடங்களுக்கு பிறகு முதன் முறையாக ரஷ்யா தனது வெளி நாட்டு கடனை செலுத்தாமல் தவித்து வருகின்றது. இது ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் தடை அறிவிப்புக்கு பிறகு வந்துள்ளது.

வட்டி + அபராதம்

வட்டி + அபராதம்

குறிப்பாக ரஷ்யாவிடம் போதிய நிதி இருந்தாலும் கூட, அதனை செலுத்தும் வழி இல்லை என்று தான் கூற வேண்டும். கடந்த மே 27 அன்றே செலுத்த வேண்டிய 100 மில்லியன் டாலர் வட்டி தொகைக்கான காலம் முடிந்துள்ளது. இதனால் அபராதமும் விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இது அபராதம் விதிக்கப்படலாம். வட்டி அதிகரிக்கலாம் என்பதை காட்டிலும் இன்னும் பல பிரச்சனைகளை எதிர்காலத்தில் உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மோசமான அறிகுறி
 

மோசமான அறிகுறி

இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனையானது, தற்போது நாட்டின் பொருளதாரத்தில் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் நாட்டில் பொருளாதார வளர்ச்சி மிக மோசமான வீழ்ச்சிக்கு செல்வதற்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

பத்திர சந்தையும் சரிவு

பத்திர சந்தையும் சரிவு

கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ரஷ்யாவின் யூரோபத்திரங்களும் சரிவிலேயே காணப்படுகின்றன. இது மத்திய வங்கிகளின் நிதிகள் முடக்கப்பட்ட நிலையில் சரிவினைக் கண்டு வருகின்றன. ரஷ்யா வங்கிகள் மற்ற நாடுகளின் வங்கிகளில் இருந்து பரிவர்த்தனையை பெரிதும் முடக்கியுள்ளன.

ரஷ்யாவின் மோசமான நிலை

ரஷ்யாவின் மோசமான நிலை

ஆக இப்படியான பல காரணிகளுக்கு மத்தியில் பொருளாதாரம் மோசமான சரிவினைக் கண்டு வருகின்றன. தற்போது பணவீக்கம் இரட்டை இலக்கில் மோசமான நிலையை எட்டியுள்ளது. இதற்கிடையில் பொருளாதாரத்திலும் சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது. செலுத்த வேண்டிய கடனுக்காக வட்டியை செலுத்த முடியாத பின்னடைவை சந்தித்துள்ளது ரஷ்யா.

செயற்கையான பிரச்சனை

செயற்கையான பிரச்சனை

சமீபத்தில் நிலுவையில் உள்ள 40 பில்லியன் டாலர் கடனை ரூபிளில் செலுத்த தயாராக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் அதன ஏற்க மறுத்துள்ள அண்டை நாடுகள், செயற்கையாகவே ரஷ்யாவுக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியுள்ளன. இது ஒரு அரிதான ஒரு விஷயம் . கடனை செலுத்த எல்லா வழிகளையும் கொண்ட நாடு, அதனை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றது.

 இனி தான் பிரச்சனையே

இனி தான் பிரச்சனையே

ரஷ்யாவின் பத்திர சந்தையில் வாங்கி வைத்துள்ள முதலீட்டாளர்கள் இதுவரையில், பெரியளவில் ரஷ்யாவிடம் பிரச்சனையில் ஈடுபடவில்லை. ஆனால் ரஷ்யாவுக்கு இப்போது தான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அவர்கள் எவ்வளவு நாள் காத்திருப்பார்கள் என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது. ஆக ரஷ்யாவுக்கு உண்மையான பிரச்சனையே இனி தான் வரவுள்ளது. கடன் பிரச்சனை, முதலீட்டாளர்களின் பிரச்சனை, வரவுள்ளது.

இடியாப்ப சிக்கல்

இடியாப்ப சிக்கல்

கடனை செலுத்தவில்லை என்பது ஒரு பிரச்சனை எனில், இதனால் ரஷ்யாவின் கடன் மதிப்பீடும் குறைய வாய்ப்பிருக்கிறது. ஆக இதன் மூலம் எதிர்காலத்தில் ரஷ்யா கடன் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தலாம். மொத்தத்தில் மேற்கத்திய நாடுகளின் தடையால் ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து எப்படி வெளியே வரப்போகிறதோ தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Russia is facing the problem of not being able to repay the loan after 104 years

Neighbors who are indirectly waging war on Russia are paralyzing Russia in many ways. Russia is now beginning to realize its impact.

Story first published: Monday, June 27, 2022, 12:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.