அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரம் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டதாகவே தெரிகிறது. ஏற்கனவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆகி விட்டதாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அதிமுக பொருளாளர் பதவியில் இருந்து பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கு முடிவு செய்துள்ளதாக இந்த தகவல் தெரிவிக்கின்றது.
இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய அதிமுகவின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் எடப்பாடி கே பழனிசாமி பங்கேற்றுள்ளார்.
சுமார் 75 தலைமை கழக நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பன்னீர்செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கும், அந்த பொருளாளர் பதவியை யாருக்குக் கொடுப்பது என்ற முடிவும் எட்டப்படாத உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டது. ஓபிஎஸ் மீது உச்சகட்ட கொந்தளிப்பில் இருக்கும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள், ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தெரிவிக்கையில், கிழிக்கப்பட்ட பெயருக்கு பதிலாக புதிய பேனர் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று. கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.