மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக 5 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ளது; தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் கூட்டுவதற்கு தலைமை நிலைய செயலாளருக்கு (எடப்பாடி கே பழனிசாமிக்கு) அதிகாரம் இல்லை என்று, மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.
மேலும், பொருளாளர் என்ற முறையில் கட்சியின் வரவு செலவு திட்டங்களை கூட பொதுக்குழுவில் தாக்கல் செய்ய அனுமதிக்கவில்லை என்றும் அந்த மனுவில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கட்சி விதிகள் மீறபட்டு வருவதாகவும் மக்கள் பிரதிநிதி சட்டத்தின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்திடம் ஓபிஎஸ் மனு அளித்துள்ளார்.