தங்கம் விலையானது கடந்த வாரத்தில் சாமானிய மக்களுக்கு சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக சரிவில் காணப்பட்டது. இது நடப்பு வாரத்திலும் தொடரலாமோ என்ற பெருத்த எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது. ஆனால் இப்படி எதிர்பார்த்தவர்களுக்கு இன்று பெரும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஏனெனில் சர்வதேச சந்தை தொடங்கி ஆபரண தங்கம் விலை வரை, அனைத்தும் விலையில் ஏற்றத்தினை கண்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரண தங்கம் விலை எப்படியுள்ளது? வெள்ளி விலை நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
கொரோனாவுக்கும் தங்கம்.. கல்விக்கும் தங்கம்..!
ஜி7 நாடுகளின் தடை
உக்ரைன் ரஷ்யா பிரச்சனைக்கு எதிர்ப்பினை தெரிவிக்கும் விதமாக, உலக நாடுகள் பலவும் பல்வேறு தடைகளை ரஷ்யா மீது விதித்து வருகின்றன. இதற்கிடையில் ஜி7 கூட்டமைப்பானது ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யும் தங்கத்திற்கு தடை விதிக்க முடிவு எடுத்துள்ளது. இது சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மிக மோசமான தாக்கதினை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகின்றது. இதற்கிடையில் தான் இன்று தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
தடை விதித்தால் என்னவாகும்?
சில நாடுகள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதித்த நிலையில் தான், கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத உச்சத்தினை எட்டியது. இன்று வரையில் விலை குறைந்ததாக தெரியவில்லை. அதேபோல தங்கம் இறக்குமதிக்கும் தடை விதித்தால், விலை என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது மேற்கொண்டு தங்கம் விலை வரலறு காணாத அளவு ஏற்றம் காண வழிவகுக்கலாம்.
தங்கத்திற்கு ஆதரவு
அதேசமயம் சர்வதேச அளவில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில் வட்டி விகிதம் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனினும் தொடர் வட்டி அதிகரிப்பானது, பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். ஆக மொத்தம் இதுவும் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை அதிகரிக்க காரணமாக அமையலாம்.
தேவை குறையலாம்
தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், தேவையும் குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. வட்டி விகிதம் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் கைகளில் பணப்புழக்கமும் குறையலாம் என்ற நிலையில், இது மேற்கொண்டு அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற பொருட்களில், முதலீடுகளை குறைக்கலாம்.
சர்வதேச சந்தையில் தங்கம்
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது தற்போது 6 டலார்களுக்கும் மேலாக அதிகரித்து, 1836.75 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. தங்கம் விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச சந்தையில் வெள்ளி
சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும், தங்கத்தினை போல சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது அவுன்ஸூக்கு 1.22% அதிகரித்து, 21.420 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் தங்கம் விலை
சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படும் நிலையில், இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 201 ரூபாய் அதிகரித்து, 50,824 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது.கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய சந்தையில் வெள்ளி விலை
இந்திய சந்தையில் வெள்ளி விலையும் சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. தற்போது கிலோவுக்கு 581 ரூபாய் அதிகரித்து, 60,330 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் உச்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
ஆபரண தங்கம் விலை
ஆபரண தங்கம் விலையும் இன்று சற்றே அதிகரித்து காணப்படுகின்றது. குறிப்பாக சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து, 4770 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 38,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
தூய தங்கம் விலை
இதே சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இதுவும் கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து, 5203 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 41,624 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 52,030 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை நிலவரம்
ஆபரண வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்து காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு 30 பைசா அதிகரித்து, 66 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 660 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து, 66,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
gold prices rises as G7 moves to ban Russian bullion import: is it a right time to buy gold?
As the price of gold rose in the international market, today the price of jewelery gold rose by Rs 80 per razor to Rs 38,160.