ஐபிஎல் போட்டிகள் விளையாட்டு என்பதைத் தாண்டி தற்போது மிகப்பெரிய வர்த்தகமாக மாறியுள்ள நிலையில் அடுத்த 5 வருடத்திற்காக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக் கடுமையான போட்டிகள் மத்தியில் முகேஷ் அம்பானி-யின் Viacom18 மற்றும் டிஸ்னி ஸ்டார் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இரு நிறுவனங்கள் தங்களது ஏலத்தை உறுதி செய்ய முக்கியமான பணிகளைச் செய்யத் துவங்கியுள்ளது.
சான்ஸே இல்லை.. திருப்பூரை எந்த சிட்டியோடும் ஒப்பிடவே முடியாது! என்னா வளர்ச்சி! பியூஷ் கோயல் புகழாரம்
வாய்காம்18 நிறுவனம்
ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய மூன்று நாட்டின் மிகப்பெரிய வங்கிகள், இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) போட்டிகளின் ஒளிபரப்பு ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு சொந்தமான வயாகாம்18 நிறுவனத்திற்கு வங்கி உத்தரவாதங்களை வழங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
டிஸ்னி-ஸ்டார் நிறுவனம்
இதேபோல் BNP Paribas மற்றும் Deutsche Bank ஆகியவை தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வென்ற டிஸ்னி-ஸ்டார் நிறுவனத்திற்கான வங்கி உத்தரவாதங்களை வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியாவின் ஸ்டார் டெர்வொர்க் அமெரிக்க மீடியா நிறுவனமான டிஸ்னி உடன் இணைந்து நடக்கும் காரணத்தால் வெளிநாட்டு வங்கிகளிடம் வங்கி உத்தரவாதங்களைப் பெறுகிறது.
5 வருட திட்டம்
ஐபிஎல் உலகின் இரண்டாவது பணக்கார விளையாட்டு நிகழ்வாக மதிப்பிடும் நிலையில் அடுத்த 5 வருடத்திற்கான ஒளிபரப்பு உரிமைகளின் ஏலத்தின் போது வால்ட் டிஸ்னியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டார் மற்றும் வயாகாம்18 ஆகியவை ஏ மற்றும் பி ஆகிய பேக்கேஜ்களை வென்றன.
2027ஆம் ஆண்டு வரை
2027 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை டிவி மற்றும் டிஜிட்டல் மீடியாவில் ஒளிபரப்ப டிஸ்னி 23,575 கோடி ரூபாயும், ரிலையன்ஸ் Viacom18 20,500 கோடி ரூபாயும் செலவழிக்க உள்ளது.
முகேஷ் அம்பானி
இதேவேளையில் முகேஷ் அம்பானி-யின் Viacom18 பி பிரிவு பேக்கேஜ் மட்டும் அல்லாமல் மற்ற பேகேஜ்களையும் வென்று இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சுமார் 23,750 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு ஏலத்தில் ஐபிஎல் ஒளிபரப்பு பேகேஜ்களை வென்றிருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.
வங்கி உத்தரவாதங்கள்
“கிரிக்கெட் போர்டின் விதிமுறைகளுக்கு இணங்க இரு நிறுவனங்களும் வங்கி உத்தரவாதங்களை (BGs) சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இரு நிறுவனங்களிடம் சுமார் 6க்கும் அதிகமான நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
9,600 கோடி ரூபாய் உத்தரவாதம்
Disney-Star மற்றும் Viacom18 ஆகியவை கூட்டாகச் சுமார் 9,600 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியல்லாத உத்தரவாதங்களை ஏற்பாடு செய்து வருகின்றன, அடுத்த ஐந்து ஆண்டுகளில் பணம் செலுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் பிசிசிஐ அமைப்பு இந்த வங்கி உத்தரவாதங்களைக் கொண்டு பணமாக்க முடியும்.
IPL broadcast bid winners Viacom18, Disney Star talks with bank guarantee for 9600 crore
IPL broadcast bid winners Viacom18, Disney Star talks with bank guarantee for 9600 crore IPL: டிஸ்னி – ஸ்டார், வயாகாம்18 திடீரென வங்கிகள் உடன் பேச்சுவார்த்தை.. இதற்குத் தானாம்..!!