ஃபாரினில் இருக்கும் கணவன் இறந்ததாக கூறி இன்ஷுரன்ஸ் பணத்தை அபேஸ் செய்த மனைவி!

இன்ஷுரன்ஸ் பணத்துக்காக கணவன் இறந்துவிட்டதாக போலி சான்றிதழ் கொடுத்து 25 லட்சம் ரூபாயை மனைவி அபேஸ் செய்த நிகழ்வு மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள பரனா காவல்நிலைய எல்லைக்குட்டபட்ட பகுதியில் நடந்திருக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவுக்கு பணி நிமித்தமாக சென்றிருக்கிறார் நுர்ஜமால் ஷேக். இவரது மனைவி ஷாஹினா கதும். நுர்ஜமால் சவுதிக்கு சென்ற பிறகு ஷாஹினா அவரிடம் பேசுவதை குறைத்திருக்கிறார்.
மேலும் அவரால் உடனடியாக இந்தியா வர முடியாது என்பதை அறிந்திருந்த ஷாஹினா, நுர்ஜமால் பேரில் உள்ள இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் எடுக்க திட்டம் தீட்டியிருக்கிறார்.
image
இதற்காக சவுதியில் உயிரோடு இருக்கும் கணவர் நுர்ஜமால் ஷேக் இறந்துவிட்டதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனை வைத்து வங்கிக்கு சென்று அவரது கணக்கில் உள்ள பணம், காப்பீடு நிறுவனத்திலிருந்து இன்ஷுரன்ஸ் பணம் என 25 லட்ச ரூபாயையும் பெற்று ஷாஹினா தப்பியிருக்கிறார்.
இந்த நிலையில் 5 ஆண்டுகள் கழித்து சவுதியில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நுர்ஜமால், வங்கிக்கு சென்றபோது தான் இறந்துவிட்டதாக சான்றிதழ் காட்டி மனைவி ஷாஹினா பணத்தை எடுத்து விட்டதாக அவரிடம் மேனேஜர் கூறியிருக்கிறார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நுர்ஜமால், ஷாஹினா குறித்து போலீசில் புகாரும் அளித்திருக்கிறார். அதில், தனது மனைவிக்கு வேறொரு நபருடம் தொடர்பு இருப்பதால் என்னுடைய பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டார் எனவும், எனக்கு நீதி பெற்று தரும்படியும் தெரிவித்திருக்கிறார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.