அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி, மகள் உட்பட மேலும் 25 அமெரிக்கர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார நடவடிக்கைகள் தொடர்ந்து விரிவடைவதன் எதிரொலியாக, ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் மேலும் 25 அமெரிக்கர்கள் சேர்க்கப்படுவதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.