“அந்தரங்க விஷயங்கள் உனக்கு தெரிந்துவிட்டது!" – நடிகை கொடுத்த அதிர்ச்சி புகார்

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த நடிகை ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “நான் என்னுடைய குடும்பத்தோடு வசித்து வருகிறேன். நான் கிராபிக் டிசைனிங் படித்துள்ளேன். எனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்து, இயக்குநர் பாக்கியராஜ் சாரின் படம் ஒன்றிலும், இன்னொரு படம் ஒன்றிலும் கதாநாயகியாக நடித்துள்ளேன். இதுதவிர விளம்பர படங்களிலும் நடித்துள்ளேன். என்னுடைய பெற்றோரிடம் ஏற்பட்ட சண்டை காரணமாக கோபத்தில் நான் வீட்டை விட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியேறினேன்.

பாலியல் தொழில்

அப்போது என்னுடைய தோழி ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றேன். அங்கு தோழி மூலம் சினேகா என்பவரின் நட்பு கிடைத்தது. அதனால் அவர் தங்கியிருந்த ராமாவரத்துக்குச் சென்றேன். கடந்த 24.3.2022-ம் தேதி முதல் 14.5.2022-ம் தேதி வரை சினேகா தங்கியிருந்த வீட்டின் வாடகையை நானும் பகிர்ந்து கொண்டு அங்கு தங்கியிருந்தேன். அப்போது சினோகாவைப் பார்க்க பிரகாஷ், ரியா, நந்தினி ஆகியோர் வருவார்கள். அவர்கள் அனைவரும் போதை மாத்திரைகளை பயன்படுத்துவார்கள். நான் அந்த வீட்டில் தங்கியிருந்த காலத்தில் சில ஆண்கள் வந்துச் செல்வார்கள். அவர்கள் போதையில் பாலியல் உறவில் ஈடுபடுவார்கள். இந்த தகவல் எனக்கு பிறகுதான் தெரியவந்தது.

இந்தச் சூழலில் ஒருநாள் நான் வீட்டில் தனியாக இருந்தபோது சினேகா, போதையில் இருந்தார். அவர் அழுது கொண்டே இருந்தாள். நான் அவளிடம் விசாரித்தபோது மனதில் உள்ளதை சினேகா என்னிடம் பகிர்ந்து கொண்டாள். தான் (சினேகா) போதைக்கு அடிமையாகி விட்டதால் போதை மாத்திரைகள் இல்லாமல் இருக்க முடியாது என்றும் நான் ரியா, நந்தினி ஆகிய மூன்று பேரும் பாலியல் தொழில் செய்து வருவதாகவும் கூறினாள். அதைக்கேட்டு எனக்கு பயம் ஏற்பட்டது. அதனால் என்னுடைய நண்பர் ஒருவரை வீட்டுக்கு வரச்சொல்லி அங்கிருந்து புறப்பட திட்டமிட்டேன். ஆனால் சினேகா, என்னை போக அனுமதிக்கவில்லை. மேலும் எங்களின் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் உனக்கு தெரிந்து விட்டது. அதனால் இதை வெளியில் நீ சொல்லிவிடுவாய் என என்னை மிரட்டினாள்.

புகார் மனு

வீட்டில் நடக்கும் தகவலை வெளியே சொன்னால் உன் மீதும் உன் நண்பர் மீதும் பொய் வழக்கு போடுவோம் என அவர்கள் மிரட்னர். இருப்பினும் நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். 30 நாள்களுக்கு பிறகு சினேகா, பிரகாஷ் அவரின் நண்பர்கள் என்னை செல்போனில் அழைத்து மிகவும் தகாத வார்த்தைகளால் திட்டினர். மேலும் ஒரு ஹோட்டலுக்கு வரும்படி கூறினர். அங்கு உடனடியாக வரவில்லை என்றால் பாலியல் தொழில் ஈடுபட்டதாக என்னை மாட்டிவிடுவோம் என மிரட்டினர். என்னை எப்படியாவது மிரட்டி அவர்களுடன் பாலியல் தொழில் செய்ய வைக்க அனுதினமும் எனக்கு பல தொல்லைகளைக் கொடுத்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி எனக்கு எந்தவித இடையூறு இல்லாத வகையில் எனக்கு தக்க பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார். நடிகை ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். விசாரணை முடிவில்தான் உண்மை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.