அமர்நாத் யாத்திரை வரும் யாத்ரீகர்கள் ஆதார் அல்லது பயோ மெட்ரிக் சரிபார்க்கப்பட்ட அடையாள அட்டை எடுத்து வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பிரசித்திபெற்ற அமர்நாத் யாத்திரை, நாளை மறுநாள் தொடங்கி, ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
புனித பயணம் வருவோருக்கு நாள்தோறும் Langer எனப்படும் உணவு வழங்கப்படுகிறது. இதற்காக சோனாமார்க் பகுதியில் உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. நாள்தோறும் ஒன்றரை லட்சம் பேருக்கு உணவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.