வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் அகதிகள் 46 பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆன்டோனியோ பகுதியில் ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.
கடுமையான வெப்பம் காரணமாகவும், உடலில் நீர்ச்சத்து வெளியேறியதால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்திய பின்பே முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.
Advertisement