கேரள மாநில அரசு தங்களது அரசு ஊழியர்களுக்கு புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்துள்ளதால் இந்த திட்டத்தால் ஏராளமானோர் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
500 ரூபாய் பிரிமியத்தில் ரூ.1.50 லட்சம் வரை மருத்துவ செலவுக்காக இந்த இன்சூரன்ஸ் திட்டத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
3 முத்தான பங்குகள்.. முதலீடு செய்யலாமா..? வேண்டாமா..?
கேரள மாநில அரசு ஊழியர்களுக்கு கொண்டு வந்துள்ள இந்த இன்சூரன்ஸ் திட்டத்திற்கு மாநில அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதிய இன்சூரன்ஸ் திட்டம்!
கேரள மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பென்ஷன் வாங்குபவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம் என கேரள அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினர் மற்றும் பென்சன் தாரர்களும் இந்த திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.
500 ரூபாய் பிரிமியம்
MEDSEP என்ற பெயருள்ள இந்த திட்டத்தில் மாதாந்திர பிரீமியம் தொகை 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் அதற்கு 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்றும் ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த காப்பீடு திட்டம் அமலுக்கு வருகிறது என்றும் அரசு தெரிவித்துள்ளது. எனவே ஜூன் மாத சம்பளத்தில் அரசு ஊழியர்களுக்கு 500 ரூபாய் இன்சூரன்ஸ் தொகை பிடித்தம் செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பென்சன்தாரர்கள்
அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பென்ஷன்தாரர்கள், அரசு ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்கள், அரசு பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் அரசின் பொறுப்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள், துணை சபாநாயகர், சபாநாயகர் உள்ளிட்டோரும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களை சேர்ந்தார்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி
இந்த திட்டத்தை கேரள மாநில அரசு ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி நிறுவனத்தின் மூலம் செயல்படுத்துகிறது. கேரள அரசு பிரீமியம் தொகையை முன்கூட்டியே ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்தி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
6000 ரூபாய்
ஒவ்வொரு அரசு ஊழியர்களிடம் இருந்து ஆண்டுக்கு 6000 ரூபாய் பிரிமியம் வசூலிக்கும் கேரள அரசு அதில் ஒரு தொகையை பேரழிவு நோய்களுக்காக ஒதுக்கி வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தனியார்-அரசு மருத்துவமனைகள்
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் கேரளாவில் உள்ள 200 தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பயன்பெறலாம் என்றும் 1,920 வகையான நோய் சிகிச்சைகளுக்கு இந்த இன்ஷூரன்ஸ் கவர் ஆகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1.5 லட்சம்
இந்த திட்டத்தில் சேர்ந்து உள்ளவர்கள் ரூ.1.5 லட்சம் வரை மருத்துவச் செலவிற்காக செலவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையின் சிகிச்சை செலவு, மருத்துவர்களின் கட்டணம், அறை வாடகை, உணவு செலவுகள் உள்பட அனைத்தும் இந்த இன்ஷூரன்ஸ் காப்பீடு திட்டத்தில் இணைந்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
MEDISEP insurance scheme, Kerala Govt introduced for staffs
MEDISEP insurance scheme for Kerala govt staff, pensioners from July 1 | அரசு ஊழியர்களுக்கு 500 ரூபாயில் புதிய காப்பீடு: இவ்வளவு பயன்களா?