அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் இந்த பாதிப்புக்கள் ஏற்படுத்துமாம்! உஷாரா இருங்க


பொதுவாக ஒருவர் தினமும் 3 லிட்டர் அல்லது அதற்கு மேல் தண்ணீர் அருந்த வேண்டும் என பரிந்துரைக்கின்றன. இருப்பினும் நீரிழப்பைப் போலவே அதிமாகவும் தண்ணீர் அருந்துவதும் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. 

அந்தவகையில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் அருந்தினால் என்ன நடக்கும் என்பதை இங்கே பார்ப்போம். 

அளவுக்கு அதிகமாக தண்ணீர் குடித்தால் இந்த பாதிப்புக்கள் ஏற்படுத்துமாம்! உஷாரா இருங்க | What Happens When You Drink Too Much Water

  • அதிகமாக தண்ணீர் பருகினாலும் உடலில் நீர்ச்சத்து இழப்பு உண்டாகும். உடலில் உள்ள சோடியம் அளவும் நீர்த்துபோய்விடும். அதற்கு ‘ஹைப்போனட்ரீமியா’ என்று பெயர். உடலில் உள்ள உப்பு மற்றும் பிற எலட்ரோலைட்டுகள் நீர்த்துப்போகும்போது இது ஏற்படுகிறது. 
  • அதிக அளவு தண்ணீர் பருகினால் உடலில் உள்ள திரவ அளவில் ஏற்றத்தாழ்வு ஏற்படும். அப்போது சோடியம் அளவு குறையும். அதனால் வாந்தி, குமட்டல், சோர்வு, தசை பிடிப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகலாம். அதிக அளவு தண்ணீர் பருகும்போது சிறுநீரகங்கள் கூடுதலாக செயல்படவேண்டியதிருக்கும்.
  •  அதிகப்படியாக தண்ணீர் பருகுவதால் வியர்வை மற்றும் அடிக்கடி சிறுநீர் வெளியேறுதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதனால் சிறுநீரகங்களின் இயக்கம் நெருக்கடிகளுக்கு உள்ளாகும்.  
  • இரவில் நிறைய தண்ணீர் பருகுவது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும். தூங்கும்போது மூளை ஆண்டிடையூரிடிக் ஹார்மோனை வெளியிடும். இது ரத்தத்தில் தண்ணீரின் அளவை சமநிலைப்படுத்தக்கூடியது. மேலும் இந்த ஹார்மோன் சிறுநீரகத்தின் செயல்பாட்டை குறைத்து இரவில் சிறுநீர் வெளியேறுவதை கட்டுப்படுத்த துணைபுரியக்கூடியது. அதனால் இரவில் அதிக தண்ணீர் பருகக்கூடாது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.