பிரபல குணச்சித்திர நடிகர் பூ ராமுவின் மறைவுக்கு சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குணச்சித்திர நடிகர் பூ ராமு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பூ ராமுவின் மறைவுக்கு சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அவரை சந்தித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், தனது ட்விட்டர் பக்கத்தில்
‘தேர்ந்த நடிப்பாலும், சிறந்த கதாபாத்திர தேர்வாலும் முக்கியமான படங்களில் பணியாற்றி பாராட்டை பெற்ற குணச்சித்திர நடிகர் அண்ணன் ‘பூ’ ராமு அவர்களின் மறைவு கலையுலகிற்குப் பேரிழப்பு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அண்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன்’ என தெரிவித்துள்ளார்.
தேர்ந்த நடிப்பாலும், சிறந்த கதாபாத்திர தேர்வாலும் முக்கியமான படங்களில் பணியாற்றி பாராட்டை பெற்ற குணச்சித்திர நடிகர் அண்ணன் ‘பூ’ராமு அவர்களின் மறைவு கலையுலகிற்குப் பேரிழப்பு, ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அண்ணனின் உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தேன். pic.twitter.com/xPWlAhACy9
— Udhay (@Udhaystalin) June 27, 2022
‘பூ’ என்ற படத்தில் நடித்து பிரபலமானதால் பூ ராமு என்று அழைக்கப்பட்ட அவர் பரியேறும் பெருமாள், சூரரைப்போற்று, கர்ணன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.