ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசரச் சட்டம் தொடர்பாக, ஒய்வு பெற்ற சென்னை தலைமை நீதிபதி சந்துரு தலைமையில் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரங்களை ஆராயவேண்டும். ஆன்லைனில் விளையாடுவதற்கு பயன்படுத்தப்படும் ஆன்லைன் கட்டணங்கள் குறித்து ஆராயப்பட வேண்டும்.
மேலும், ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வதற்கான அம்சங்கள் பற்றி பரிந்துரைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவின் பதவிக்காலம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும் என தெரிவித்து இருந்தனர்.
நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு கடந்த 13 தேதி முதல் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு, தற்கொலை உள்ளிட்ட ஆபத்தை கண்டறியும் தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்தது.
ஆன்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்வது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் நீதியரசர் சந்துரு தலைமையிலான குழு 71 பக்க அறிக்கையை அளித்துள்ளது. அந்த அறிக்கையில் இயல்பான இயல்பு நிலையில் வாழ்வதற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டுகள் உள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் திறன் மேம்படும் என சொல்லப்படுவது தவறானது. பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன என தெரிவித்துள்ளனர்.