நிதி ஆயோக் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இந்தியாவில் கிக் பொருளாதாரம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது.
தற்போது 77 இலட்சம் மக்கள் கிக் பொருளாதாரத்தில் பணியாற்றி வரும் நிலையில் வரும் 2030ஆம் ஆண்டில் இது சுமார் 2.35 கோடியாக அதிகரிக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் கிக் பொருளாதாரம் என்றால் என்ன? கிக் வேலை என்றால் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க திணறும் இந்திய பொருளாதாரம்.. தமிழ்நாட்டின் நிலைமை என்ன தெரியுமா..?
கிக் பொருளாதாரம்
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் உலகெங்கும் கிக் வேலை முறை அதிக அளவில் பரவி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தான் விரும்பிய நேரத்தில், விரும்பிய பணியை, விரும்பிய நிறுவனத்திற்காக செய்து கொள்ளும் முறைதான் கிக் வேலை என்று அழைக்கப்படுகிறது.
கிக் வேலை
இந்த முறையில் ஊழியர்கள் குறைவான நேரத்தில் தங்களுக்கு தேவையான வருவாயை ஈட்ட முடிவதால் தொழிலாளர்கள் கிக் முறையில் பணி செய்வதை விரும்பி வருகின்றனர். இந்த முறையில் ஊழியர்களுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதும் சுயமாக வேலை செய்ய விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு என்றும் கூறப்படுகிறது.
ஃபிரீலன்ஸ் பொருளாதாரம்
அதேபோல் செய்யப்படும் வேலைக்கு மட்டும் ஊதியம் தந்தால் போதும் என்றும் நிரந்தர ஊதியம் தர வேண்டிய அவசியம் இல்லை என்றும் நிறுவனங்களும் கிக் முறையை ஏற்று கொள்வதால், உலகம் முழுவதும் கிக் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இதை ஃபிரீலன்ஸ் பொருளாதாரம் என்றும் அழைக்கலாம்.
அமெரிக்கா – இங்கிலாந்து
2027ஆம் ஆண்டு அமெரிக்காவில் 50 சதவீத தொழிலாளர்கள் கிக் முறையில்தான் தொழிலாளர்களாக இருப்பார்கள் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. பிரிட்டனில் கடந்த சில ஆண்டுகளில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் கிக்
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளை அடுத்து இந்தியாவின் கிக் பொருளாதாரம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருக்கிறது. தற்போது சுமார் 77 லட்சம் மக்கள் கிக்பொருளாதார முறையில் பணிபுரிந்து வரும் நிலையில் வரும் 2030ஆம் ஆண்டு 2.35 கோடியாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக நிதி ஆயோக் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
4.1% கிக் தொழிலாளர்கள்
கடந்த 2019 – 20 ஆம் ஆண்டில் இந்தியாவில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை 68 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது 75 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும் வரும் 2029ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக உயர வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக மொத்த பணியாளர்களில் 4.1% கிக் தொழிலாளர்களாக தான் இருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த துறையில்?
சில்லரை வர்த்தகம், விற்பனை துறை, போக்குவரத்து துறை மற்றும் நிதி-காப்பீட்டு துறை ஆகியவற்றில் கிக் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் நிதி ஆயோக் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Indian gig economy to have 2.35 crores workers by 2029-30 says Niti Aayog
Indian gig economy to have 23.5 million workers by 2029-30 says Niti Aayog | இந்தியாவில் அதிகரிக்கும் கிக் பொருளாதாரம்: கிக் என்றால் என்ன தெரியுமா?