இந்தியாவில் நம்ம பருப்பு வேகாது.. வெளியேறும் கிரிப்டோ வியாபாரிகள்..!

கிரிப்டோகரன்சிகள் என்றாலே பல அடி தள்ளி நிற்கும் அளவுக்கு முதலீட்டாளர்களை பாடாய் படுத்தி வருகின்றது. பங்கு சந்தையினை விட கிரிப்டோகரன்சிகளில் எளிதில் லாபம் பார்க்கலாம். விரைவில் கோடீஸ்வரர் ஆகலாம் என்ற நினைத்தவர்களுக்கு பெரிய பாடமாக கற்றுக் கொடுத்துள்ளது கிரிப்டோகரன்சிகள்.

ஏனெனில் கடந்த சில மாதங்களாகவே அந்த அளவுக்கு ஏற்ற இறக்கம் அதிகம். தொடர்ந்து பலத்த சரிவினைக் கண்டு வந்த கிரிப்டோகரன்சிகளில், சில எக்ஸ்சேஞ்சில் ப்ரீஸ் செய்யப்பட்டதும் மறுக்க முடியா உண்மை.

வரலாற்று சரிவில் ரூபாய் மதிப்பு.. அன்னிய முதலீடு வெளியேற்றம்.. என்ன காரணம்..?!

இந்தியாவின் ஆதரவு?

இந்தியாவின் ஆதரவு?

உலக நாடுகள் பலவும் கிரிப்டோகரன்சிகளுக்கு ஆதரவு தெரிவித்து வந்தாலும், இந்தியா பெரியளவில் ஆதரவு கொடுக்கவில்லை. மாறாக கிரிப்டோகரன்சி குறித்தான ஒழுங்கு முறை சட்டம், ஜிஎஸ்டி வரி விகிதம் என கிரிப்டோகரன்சியினை ஒழுங்கு படுத்த நினைத்தது.

கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்

கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்

அதோடு இந்தியாவே சொந்தமாக ஒரு கிரிப்டோகரன்சியினை அறிமுகப்படுத்தும். அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகள் ஆரம்பத்தில் சற்று அதிருப்தியினை ஏற்படுதியிருந்தாலும், இன்று இதுவே பலரின் முதலீடுகளை காப்பாற்றியுள்ளது எனலாம்.

முதலீடுகள் சரிவு

முதலீடுகள் சரிவு

கிரிப்டோகரன்சி சந்தையில் நிலவி வரும் கலவரத்திற்கு மத்தியில், இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோகரன்சி மீதான ஆர்வம் குறைந்துள்ளது. இது டிஜிட்டல் கரன்சி மீதான மோகத்தினையும் குறைத்துள்ளது. இதனால் கிரிப்டோகரன்சிகளில் முதலிடுகள் கணிசமான சரிவினைக் கண்டுள்ளன.

நிறுவனர்கள் வெளியேற்றம்
 

நிறுவனர்கள் வெளியேற்றம்

இதற்கிடையில் இந்தியாவில் உள்ள சில கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்களின் நிறுவனர்கள் துபாய்க்கு குடும்பத்துடன் இடம் பெயர்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கிரிப்டோகரன்சிகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையியோல், வாஷிர்X – ன் இணை நிறுவனர்களான நிச்சல் ஷெட்டி மற்றும் சித்தார்த் மேனன் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகளின் துணை நிறுவனர்கள் துபாய்க்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரபு நாடுகளில் கிரிப்டோகரன்சிகள் மீது பெரியளவிலான கட்டுப்பாடுகள் எதுவும் பெரிதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Founders of the crypto exchanges are leaving India as restrictions are being imposed

As restrictions on cryptocurrencies increase in India, it has been reported that the founders of some cryptocurrency exchanges in India have moved to Dubai with their families.

Story first published: Tuesday, June 28, 2022, 13:35 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.