உக்ரைனில் வணிக வளாகம் மீது ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது.
கிரெமென்சுக் நகரில், மக்கள் அதிகம் கூடியிருந்த வணிக வளாகத்தில் ரஷ்ய படைகள் திடீரென தாக்குதல் நடத்தின. ஏவுகணைத் தாக்குதலால் வணிக வளாகம் தீயில் எரிந்த நிலையில், படுகாயமடைந்த 59 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறன்றனர்.