அதிமுகவில் கடந்த வாரம் தொடக்கத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து கட்சியில் ஒறறை தலைமை யார் என்பதில் இபிஎஸ் ஒபிஎஸ் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டது. தொடர்ந்து இருவரும் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசைனையில் ஈடுபட்டனர்.
இந்த ஆலோசனை தீவிரமடைந்து வந்த நிலையில். பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி கட்சி பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கூறி ஒபிஎஸ் இபிஎஸ்க்கு கடிதம் எழுதினார். ஆனால் பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று இபிஎஸ் தரப்பு உறுதியாக இருந்த நிலையில். இது தொடர்பாக ஒபிஎஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து கடந்த 23-ந் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை இபிஎஸ் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதே சமயம் வரும் ஜூலை 11-ந் தேதி மீண்டும் குர்ட்டம் நடைபெறும் என்று அறிவித்து எவ்வி தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவு பெற்றது.
மேலும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஒ.பன்னீர்செல்வத்தின் பெயரை கூட மேடையில் பயன்படுத்தவில்லை. இதனால் கூட்டத்தில் இருந்து பன்னீர்செல்வம் பாதியில் வெளியேறியது அவர் மீது இபிஎஸ் ஆதரவாளர்கள் தண்ணீர்பாட்டில்களை வீசியதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் ஒபிஎஸ் தரப்பு அதிருப்தியில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் குறித்து ஒபிஎஸ் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவில், பொதுக்குழு தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“