எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில், தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இந்த நிலையில் போதிய எரிபொருள் இல்லாததால் இலங்கை முழுவதும் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளதாக, அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.