ONGC நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் மும்பை அருகே கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
பவான் ஹான்ஸ் என்ற அந்த ஹெலிகாப்டர், அரபிக் கடலில் உள்ள ONGCக்கு சொந்சமான துரப்பணம் அருகே கடலில் விழுந்தது.
ஹெலிகாப்டரில் 2 விமானிகளும் 7 பயணிகளும் இருந்த நிலையில், அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
காயமடைந்த 4 பேர், ஜூகுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.