கர்நாடகாவில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி விழுந்த கர்ப்பிணியை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் காப்பாற்றிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அங்குள்ள தர்வாத் ரயில் நிலையத்திற்கு கைக்குழந்தையை வைத்திருந்த கணவருடன் கர்ப்பிணி ஒருவர் வந்துகொண்டிருந்தார்.
அப்போது ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்வதை அறிந்த அவர்கள் அவசரமாக ரயிலில் ஏற முயன்றனர். அப்போது கர்ப்பிணி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதைப்பார்த்த ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார். இதுதொடர்பான காண்போரை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM